தெற்கு லண்டனில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை!

ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒருவரே லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவரை பொலிஸ்நிலையத்திற்கு வெளியே சோதனையிட்டவேளை அவரிடம் போதைப்பொருட்களும் துப்பாக்கி ரவைகளும் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் சார்ஜன்ட் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவேளை அவரது கைகள் பிணைக்கப்பட்டிருந்தன என பொலிஸ் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக மட்டியுரட்டான என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தன்மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் அரசாங்கத்தின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரிகளுக்கு அறிமுகமானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் தீவிரவாத மயப்படுத்தலை தடுக்க முயலும் பிரிவிற்கு சந்தேகநபரை பற்றி தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.