திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதி இன்னுமொரு வாகனம் ஒன்றினையும் சேதப்படுத்தியுள்ளதோடு முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.