தமிழ் உணர்வற்ற தனியார் போக்குவரத்து துறையினர்

நாளை நடைபெறவுள்ள வேலை தவிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவரும் வேளையில் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து துறையினர் ஆதரவளிப்பதாக இதுவரை தகவல்கள் ஏதும் கிட்டவில்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் தாம் எழுத்துமூலம் அறிவித்தும் இதுவரை எந்த ஊடகங்களுக்கும் எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என அறிய முடிகின்றது

தமிழ் இனத்துக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த தியாகச்செம்மல் திலீபனின் நினைவேந்தலை தடுத்த சிங்கள அரசுக்கு எதிரான கண்டனப் போராட்டம் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவேண்டும் என்ற தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்கும் இவ்வேளையில் தனியார் போக்குவரத்து துறையினர் அக்கறை கொள்ளாதது மிகுந்த வேதனை அளிப்பதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.