தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஸ்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஸ் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் மத்தியகுழுவில் நீக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தொரிவித்துள்ளார்.