கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டார் மணிவண்ணன்! கிழக்கிற்கு சென்ற தேசிய அமைப்பாளர் பதவி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இன்று முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கட்சியின் மத்திய குழு இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி மட்டக்களப்பை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.