எமி கொனி பாரெட் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை!

சமூக கென்சர்வேட்டிவ் விருப்பமான எமி கொனி பாரெட்டை (Amy Coney Barrett) புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் எமி கொனி பாரெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசிய ட்ரம்ப், அவரை “இணையற்ற சாதனை படைத்த பெண்” என வர்ணித்தார்.

செனட்டர்களால் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்பட்டால், சமீபத்தில் இறந்த 87 வயதான லிபெரலின் நீதியரசர் ரூத் பேடர் கின்ஸ்பேர்க்கிற்குப் பதிலாக எமி கொனி பாரெட் நியமிக்கப்படுவார்.

நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் குறித்த நியமனம் தொடர்பாக செனட்டில் கடுமையான விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு நியமிக்கப்பட்டால் 48 வயதான எமி கொனி பாரெட் தற்போதைய குடியரசுக் கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.