வலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.

யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை உத்திரிகைக் குளத்திற்கருகில் சுண்ணாகம் கந்தரோடைப்பகுதியில் வலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தரும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பணியாளருமாகிய யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் 40 வயது  மூன்று பிள்ளைகளின் தந்தையே விநயோக பணியின் போது அதிகாலை 4.30 மணியளவில் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்
வாள்வெட்டுக்கு இலக்கானவர்  படுகாயமடைந்து தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
சம்பவத்தின் போது வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் களவாடிச் சென்றுள்ளனர்
மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்கின்றனர்