லங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார.

இன்றைய  தினம் யாழ்ப்பானம் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

நான் பதவியேற்ற பின் இன்றைய தினம் முதன்முதலாக இந்து மத குருவை  சந்தித்திருக்கின்றேன் சந்திப்பில் மிகவும் ஆக்கபூர்வமானதாக  பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றேன்

 யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக பதவியேற்றபின் இன்றைய தினம் முதன் முதலாக விஜயம் மேற்கொண்டு இந்த இந்து மதகுருவிடம் ஆசியினைப் பெற்று ள்ளேன்
ராணுவத்தினர் ஆகிய எமது பிரதான நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி லோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துதலாகும்
இந்த அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்மொழிவுகளை மக்கள் சார்ந்து மேற்கொள்ள இருக்கின்றார்கள்
  இராணுவமானது எப்போது அதாவது குறிப்பாக யாழ் மாவட்ட கட்டளை தலைமையகமானது வடக்கு மக்களுக்கு உதவி செய்வதற்கும் இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கும் அத்தோடு இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைத்திட்டங்களை இராணுவம் செயற்படுத்தும் அத்தோடு எமது பிரதேசத்தில் சமாதானம் முக்கியமானது இலங்கையர் அனைவரும் ஒரு நாட்டவர்கள் தான் என்ற கொள்கைக்கு இணங்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வசித்து வருகிறோம்  இங்கே இரண்டு நாடுமில்லை  இரண்டு  நிர்வாகமும் இல்லை இரண்டு இராணுவ கட்டமைப்பு  என்ற கதைக்கும் இடமுமில்லை நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் இங்கே பிரிவினை என்ற வார்த்தைக்குஇடமில்லை
 ஆகவே நான் இராணுவ கட்டளைத் தளபதிஎன்ற வகையில்  யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன் அத்தோடு மக்களை சந்தோஷமாக வாழ்வதற்கு உரிய வழிவகை நான் செய்வேன் எனவும் தெரிவித்தார்
யாழ்ப்பாணத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள கட்டளைத்தளபதி  மேஐர் ஜெனரல் செனரத் பண்டார பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்ற நிலையில் இன்று காலை நல்லூர் வீதியில் உள்ள நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்த யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி பின்னர் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.