மருதங்கேணி தற்காலிக சிறுவர் பெண்கள் பாதுகாப்பு நிலைய கலந்துரையாடல்.

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பாக யாழ் சமூக செயற்பாட்டு மையமும், UNFPA பிரதிநிதிகள் மற்றும்  இலங்கை பெண்கள் பணியக  பணிப்பாளர் இணைந்து அரசாங்க அதிபர் தலைமையில் மருதங்கேணி தற்காலிக பாதுகாப்பு  இல்லத்துடன் தொடர்புடைய அரச பிரதிநிகளுடன் நேற்று காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் இலங்கை பெண்கள் பணியக பணிப்பாளர், UNFPA பிரதிநிதிகள், யாழ் சமூக செயற்பாட்டு மையம் இணைப்பாளர், சிறுவர் நன்னடத்தை திணைக்கள  ஆணையாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.