கோப்பாயிலும் நினைவேந்தல்.

கோப்பாய் பிரதேச மக்களின் வேண்டுகேளுக்கு இணைங்க அங்கு அமைக்கப்பட்டு பின்னர்  இடித்து அழிக்கப்பட்ட தியாக தீபம் தீலிபன் அந்த இடத்தில் நினைவேந்தல் நடத்தப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம்  மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு துறை பொறுப்பாளர் வீரா ஆகியோர்  இன்று மாலை அங்கு சென்று ஊர் மக்கள்ளுடன் கலந்து உரையாடினார்.
அங்கு இந்த முறை நினைவு தின  நிகழ்வுகளை நடத்துவதற்கு  எற்படுகளை செய்து தருமாறும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில்   ஊர் மக்களுடன் இணைந்து   தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பிரிவு அறிவித்துள்ளது.