எமக்கு பெரும்பான்மை உள்ளது அதனை நிறைவேற்றியே தீருவோம் – பீரிஸ் சூளுரை

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் 20 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியே தீரும் என கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.

20வது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் நகல்வடிவிற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இதன் காரணமாக ஐக்கியமக்கள் சக்தி 20வது திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றம் செல்வது குறித்து கவலையடையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் நகல்வடிவத்தினை குழுநிலை விவாதத்தின் போது மாற்றத்துக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் உள்ளதாக கருதவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.