உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சுன்னாகம் தெற்குமக்களின் கோரிக்கை!

சுன்னாகம் தெற்கில் அமைந்துள்ள அரசினர் மருந்தகத்தில் நோயாளிகளுக்கு குடிநீர் வழங்கும் நீர்தாங்கியின் சேதம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் நிரப்புவதில்லை இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர் அத்தோடு இரவு வேளையில் மின் குமிழ்கள் ஒளிர விடப்படாமல் மிகவும் இருள் சூழ்ந்த நிலையில் மருத்துவமனை காட்சியளிக்கின்றது இரவுப் பாதுகாவலர் வாசலில் தன் கைபேசியில் உள்ள ஒளியிலேய நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வோண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். வைத்தியரோ பணியாளர்களோ கண்டுகொள்வதாக தெரியவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையை அண்டி 780 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.