கூட்டமைப்பு ரகசிய பேச்சு – தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி

இரண்டாம் இணைப்பு

சற்றுமுன் இடம்பெற்ற சந்திப்பின் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

இக்கூட்டத்தில் நறைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டதுடன் அனைவரது கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

கட்சியின் மத்திய குழு எதிர்வரும் 29ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ளதாகவும் அதில் மற்றைய முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற்குழுக் கூட்டம் தற்பொழுது திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறுகிறது.

இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஶ்ரீதரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சி சார்ந்த பிரச்சனை என்பனவும் ஆராயப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.