நாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு!

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதுவரை இணையத்தில் மூலமாக பதிவு செய்துள்ளதாக நாடளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களின் விபரங்கள் தற்போது இணையத்தில் உள்ளதாக அத்திணைக்களத்தின் முகாமையாளர் ஷான் விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதற்காக ஓன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

கொரோனாதொற்றை அடுத்து, உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் ஓன்லைன் மூலம் விவரங்களை சமர்ப்பிக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற சிறிது நேரத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது விவரங்களை நாடாளுமன்ற செயலகத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.