பிள்ளைகளைப் பெறுவதற்கும் சுதந்திரமில்லையா? கருணாவிடம் கேள்வி

ஸ்ரீலங்காவில் முஸ்லிம்கள் பிள்ளைகளைப் பெறுவதற்கும் சுதந்திரம் இல்லையா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருதமுனை கடற்கரை வெளியரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கருணா எமது கல்முனை மண்ணுக்கு வந்து நின்று கொண்டு முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றார். இப்போது கடைசியில் முஸ்லிம்கள் ஜப்பான் குஞ்சு போன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழ் மக்களை மாத்திரமல்ல, பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்களுக்கெதிராக தூண்டி விடுவதற்கு கருணா முயற்சிக்கின்றார். அவ்வாறென்றால் இந்நாட்டு முஸ்லிம்கள் பிள்ளைகள் பெறுவதற்கும் சுதந்திரம் இல்லையா? என்று கேட்க விரும்புகின்றேன்.

கல்முனையில் இயங்கும் தமிழ் இளைஞர் சேனாவின் அனுசரணையில் இங்கு வந்து தேர்தலில் குதித்துள்ள கருணா, இந்த மண்ணை கலவர பூமியாக மாற்றுவதற்கே முனைப்புக் காட்டி வருகின்றார்.

கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரம், கல்வி, சமூகக் கட்டமைப்பு என்று எல்லாவற்றையும் சிதைத்து, சீரழிக்கும் திட்டத்துனேயே அவர் இங்கு களமிறங்கியுள்ளார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.