தமிழருக்கான அதிகாரபகிர்வுக்கான காலம் கனிந்துள்ளது -சம்பந்தன்

இலங்கை தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதை சர்வதேசம் வலியுறுத்துகின்றது எனவே நாம் சர்வதேச ரீதியாக பலமாக இருக்கின்றோம் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளையோருக்கான பரப்புரைக்கூட்டம் இன்று (25) திருகோணமலை இந்துகலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் எழுபதாயிரம் வாக்குகளை அளிப்பதன் மூலம் இரு ஆசனங்களை கைப்பற்றமுடியும்.

பல்வேறுபட்ட மதத்தினரும் இனத்தினரும் வாழ்கின்ற பல சர்வதேச நாடுகளில் இருக்கின்ற அதிகாரப்பகிர்வுகள் வழங்கப்பட்டுள்ளதோ அவ்விதமான அதிகாரப்பகிர்வு ஏற்படக்கூடிய சூழல் இப்போது இலங்கையிலும் உருவாகியிருக்கிறது அதனை நாம் இந்த தேர்தலைப்பயன்படுத்தி நிறைவேற்றவேண்டும் எனத்தெரிவித்தார்.

அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் முன்னெடுத்து வந்த செயற்பாடுகளில் முன்னேற்றம் இருக்கின்றது. நாங்கள் பலமாக பாராளுமன்றம் செல்வோமானால் எம்மால் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறாயின் திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை நாம் கைப்பற்றவேண்டும் எனத் தெரிவித்தார்.