சீனாவின் ரகசிய திட்டம்! அதிர வைக்கும் புலனாய்வு தகவல்

இந்தியாவுக்கு எதிராக உயிரி போர் நடத்துவதற்காக மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சீனாவும், பாகிஸ்தானும் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வரும் நிலையில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரகசிய உடன்பாடு குறித்து ஆன்டனி கிளான் என்பவர் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சீனாவின் வுகானில் இருக்கும் ஆய்வகமும், பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளது.

இதன்படி திடீரென உருவாகும் நோய்கள், பரவும் நோய்கள் மீதான உயிரியல் கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, சர்வதேச சமுதாயத்திடம் இருந்து எழும் கண்டனங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தகவல்களை எவ்வாறு பறிமாறிக் கொள்வது என்பது குறித்த பயிற்சிகளை பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தான் சொந்தமாக வைரஸ் டேட்டா மையத்தை உருவாக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ்களை கண்டறிதல், எவையெல்லாம் ஆபத்தான நுண்ணுயிர்கள் என்று கண்டறிவது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.