அரசியல் கூட்டம் நடாத்திய பருத்தித்துறை பிரதேச செயலர் சிறி.ஈபிடீபிக்கு ஆதரவு….!

அண்மைக்காலமாக வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களில் தென்னிலங்கை மற்றும் பிற மாவட்ட மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் சட்டவிரோத மீன்பிடியில் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வடமராட்சி வடக்கு குட் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் 13 சங்கங்கள் இணைந்து தாம் கடல் தொழிலிற்க்கு செல்வதில்லை என பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம்

வடமராட்சி கடற்தொழிலாளர்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் கூடடிறவு சங்கங்களின் சமாச பிரதிநிதிகள் மற்றும் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திணைக்கள அதிகாரிகள் பருத்தித்துறை பிரதேச செயலாளர், கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் சிறி தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் க ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் என பலரும் அங்கு கலந்து கொண்டிருந்தனர்.

ஏன் செய்தி சேகரிக்கச் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என பருத்தித்துறை பிரதேச செயலக சிள சிற்றூழியர் மறஸறும் காவல்துறையினரால் ஊடகவியலாளர்கள் திருப்பி அனிப்பப்பட்டனர்.என் என ஊடகவியலாளர்கள் பிரதேச செயலக சிற்றூளியரிடம் கேட்டபோது பிரதேச செயலாளரே ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தனக்கு கட்டளையிட்டிருந்டாக தெரிவித்தரார் காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றும் பிரதேச செயலர் தனக்கு பணிக்கப்பட்டதையே தான் செய்வதாகவும் குறிப்பிட்டார்.காவல்துறையினரையும் ஏன் ஊடகவியலாளர்கள் உள்லலே செல்ல அனிமதிக்கவில்லை என கேட்டபோது அது தமக்கு பிரதேச செயலர் இட்ட கட்டளை என்றும் அனாகரிகமாக பதிலளித்தனர்.

இது தொடர்பில் பிரதேச செயலாளரை கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த போது வினாவியபோது தான் அப்படி யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கூறவில்லை என்று தெரிவி்த்ததுடன் தேர்தல் கண்காணிப்பு மற்றும் திணைக்கள அதிகாரிகளே இந்த கட்டளையிட்தாக தெரிவித்திருந்தனர்.

தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது ஊடகவியலாளர்களை அனிமதிப்பாதா இல்லையா என்பது தொடர்பில் ஏந்தவித அதிகாரமும் தமக்கு இல்லை என்று குறிப்பிட்டனர். இதேபோன்ற பதிலையே மீன்பிடி அமைச்சரும் வழங்கியிருந்தார்

இந்நிலையில் கலந்துரையாடல் நிறைவேற்றி வழியே வந்த மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் உள்ளே என்ன நடந்தது என்று கேட்டபோதுவடமராட்சி மற்றும் கடும் அவதிக்குள்ளாகிய மீனவர்களின் பாதிப்புக்களஸதொடர்பாக ஆராயப்பட்டதாகவும் உரிய நடவடிக்கைகளை நாளையிலிருந்து மேற்கொள்ளுமாறு நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு பணித்துள்லலதாகவும் வ உடனடியாக வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களில் தங்கியிருந்த கடலட்டை மற்றும் பிற தொழில்களில் ஈடுபடும் பிற மாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். எனினும் இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை யாழ் மாவட்ட அதிகாரிகளை கேட்டபோது குறித்த தொழிலால் ஏற்பததும் பாதிப்புகள் தொடர்பில் தமக்கு கடிதம் எழுதுமாறு தம்க்கு பணிக்க பட்டதாக தெரிவித்தனர்.

இதேவேளை இன்றைய இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் வடமராட்சி வடக்கு தலைவர் ஏன் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்று கேட்டபோது இதனைஅரசியலாக்க முயற்சிக்கவில்லை என்றும் சந்திப்பு முடிந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதாக மீன்பிடி அமைச்சர் தெரிவித்தாக குறிப்பிட்டார்.

இன்றைய இக் கலந்துரையாடல் கண்காணிக்க அரச அரச சார்பற்ற கண்காணிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்