இந்தியா- திருச்சியை சேர்ந்தவர் மன்னார் மாவட்டத்திற்குள் நுழைந்து மீண்டும் இந்தியா சென்றபோது கைது..!

இந்தியா- திருச்சியை சேர்ந்த நபர் கடல்வழியாக மன்னார் மாவட்டத்திற்குள் நுழைந்து பின்னர் தலைமன்னாரிலிருந்து கடல்வழியாக இராமேஸ்வரம் சென்ற நிலையில் தனுஸ்கோடி அரிச்சல் முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திருச்சியை சேர்ந்த முஹமட் உசேன் (வயது 68) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவரை இராமேஸ்வரத்திற்கு கொண்டு சென்ற இலங்கை படகு அங்கிருந்து தப்பி மீண்டும் மன்னாருக்குள் வந்துள்ளது.

மெரைன் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஊடுருவியவரை மெரைன் போலிஸ் ஆய்வாளர் கனகராஜ் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவரிடம் மெரைன்,கியூபிரிவு,உளவுத்துறை சுங்கத்துறை உள்ளிட்ட

பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த முஹமட் உசேன் எனவும் தற்போது திருச்சியில் வசித்து வருவதாகவும்

புடவை வியாபாரத்திற்காக இலங்கை சென்றதாகவும் தற்போது போக்குவரத்து முடக்கப்பட்டதால் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி இலங்கை படகில் இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளார். மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.