திருகோணமலையில் இரண்டு யுவதிகள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

திருகோணமலையில் இரண்டு யுவதிகள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

திருகோணமலை பகுதியில் இரு யுவதிகள் வேலை முடித்து வீடு திரும்பிக்கொண்டுருந்த வேளை முச்சக்கரவண்டியில் வந்த இனம் தெரியாத நபர்களால் ஏற்றிச்செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த 16-07-2020 மாலை 7 மணிக்கு இரு யுவதிகள் துவிச்சக்கரவண்டியில் தமது வீட்டை நோக்கி பயணித்துகொண்டுருந்த வேளை முச்சக்கரவண்டியை குறுக்கே விட்டு யுவதிகளின் கூந்தலில் பிடித்து இளுத்து ஏற்றிச்சென்று அதிகாலை 4,30 மணி வரை கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று நபர்களில் ஒருவர் வாய் பேச முடியாதவர் எனவும் யுவதிகள் தெரிவித்துள்ளனர் அவர்கள் தொடந்து தெரிவிக்கயைல் எம்மை முச்சக்கரவண்டியில் ஏற்றியதுடன் கண்ணை சாறத்தால் கட்டிவிட்டு எமது வாயை கைய்யால் பொத்தியவாறு 20 நிமிடங்களுக்கு மேல் கிடங்கு பள்ளங்களுக்குள்ளால் கொண்டு சென்று ஒரு வயல் வெளியில் தரப்பாள் விரித்து அதில் இருக்கும்படி கட்டாயப்படுத்தினர் இருந்தும் எங்கள் இருவருக்கு நான்கு குளிசைகள் போடும் படி தரப்பட்டது அதை நாம் போட்டதும் எமக்கு என்ன நடந்தது எதுவும் தெரியாது என குறிப்பிட்டனர்

சம்பவம் தொடர்பில் போலிசாரிடம் முறையிட பெற்றோர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் தெரியவருகிறது

இந்த விடையத்தை பொலிசாருக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்தவர் திருகோணமலையை சேர்ந்த வைத்தியர் எனவும் தெரிய வருகின்றது

இலங்கையில் 256 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த தகவல் வெளியாகியது.

2020 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இன்றுவரை 256 பாலியல் வல்லுறவு சம்பவங்களும், 96 பாரதூரமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும், 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது