இலங்கையில் 12வயது சிறுமிக்கு கொனோரா தொற்று!

ராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் பங்கேற்ற 139 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா்கள். இன்று இதுவரை ஒருவர் மாத்திரமே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார். கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 174 பேருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு எவருக்கும் நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய வளாகத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்