யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகம் முற்றாக முடக்கப்பட்டது..! மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என சந்தேகம்.. |

யாழ்.பல்கலைகழக தொழிநுட்ப பீடத்தில் கல்விகற்றும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தினால்,

பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் நுழையவும், வெளியேறவும் இன்று மாலை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன்,

யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சகோதரி யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தெர்ந்து ஹம்பகா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஊடாக

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பபட்டிருக்கும் தகவலின் டிப்படையில் யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.