வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் –

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு வீதி, சிவப்பிரகாசம் பாடசாலைப் பிரதேசம், வெளிச்ச வீடுப் பிரதேசம், கற்கோவளம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலைப் பிரதேசம், தும்பளை, மாதனை, புனிதநகர், நெல்லண்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.