அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறும் எண்ணம் இருந்தால் அதனை நிறுத்திக.! சி.வி.விக்கினேஸ்வரன்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி பெறும் எண்ணம் இருந்தால் தனது மாணவனான சுமந்திரன் மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகள் பெறுவது என்பது சரியான முடிவு அல்ல அவ்வாறு ஒரு எண்ணம் இருந்தால் அதனை தன்னுடைய மாணவன் கைவிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வடமராட்சி துன்னாலை வல்லிபுரம் ஆலயத்தில் இருந்து கிராமிய உலா பயணம் ஆரம்பித்து நாகர்கோவில் கிராமத்தில் நிறைவடைந்ததும் அங்கு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அமைச்சு பதவிகள் ஏற்பதனால் ஏதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என்பதனை இப்போதிருந்தே அவதானி்தே நான் இதனை கூறுகின்றேன் என்றும் வருங்காலத்தில் இவ்வாறு பாதிப்பு வரும் என்பதனை தெரிந்து கொண்டும் எதற்க்காக இவ்வாறான தீர்மானம் என்றும் இது அவசியம் அற்றது என்றும் தனிப்பட்ட முறையில் இது ஏதுவாக இருந்தாலும் இது மக்களிற்க்கு நன்மை தராது என்றார். மேலும் தேரர் ஒருவர் நல்லூர் மற்றும் கோணேஸ்வரர் ஆலயங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போது தேரர் வரலாறு தெரியாது திரிவு படுத்துகிறார் என்றார்

இன்றைய இந்த கிராம தரிசனம் வாகன பவனியில் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வேட்பாளர்களுமான சி.வி.விக்கினேஸ்வரன், எம் கே சிவாஜிலிங்கம், தவச்செல்வம் சிற்பரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சி