பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியேகத்தர் கைது!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் பாதாள உலக குழுவின் நவீன துப்பாக்கிகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.
பிட்டிபனவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ரி56 ரக துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. மேலும், 7 ரி56 ரக துப்பாக்கிகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்ட தகவலையும் பொலிசார் அறிந்தனர். இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஹொமாகம பொலிஸ் போக்குவரத்து பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிளை, சிஐடியினர் இன்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து இரண்டு ரி 56 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.