காலியில் ஒருவருக்கு கொரோனா தொற்று பலர் தனிமைப்படுத்தலில்!

காலி , ஹபராதுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் ஐ டி எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ஒரு ஆசிரியை.கோணபினுவல பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியையான அவர் பழகிய பாடசாலை ஊழியர்கள் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.