மானிப்பாய் பொலிசாரினால் 4 இளைஞர்கள் கைது!

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் நீதிமன்றங்களில் விக்டர் டிலான் மற்றும் தனு ரொக் என்பவரும் கைது சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய போலிஸார் நவாலியில் இன்று மாலை முன்னெடுத்த நடவடிக்கையின் போது, அவர்களைக் கண்டுவிட்டு தப்பி ஓட முற்பட்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வீடொன்று மீது பெற்றோல் குண்டு வீசிய வழக்கில் விக்டர் டிலான் சந்தேக நபராக உள்ளார் என்று குறிப்பிட்ட பொலிஸார், தனு ரொக்குக்கு எந்தவொரு வழக்கும் நிலுவையில் இல்லை என்றும் கூறினர்.சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.