பணிந்தது அரசு: இனி விளையாட்டு வீரர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட மாட்டார்கள்!

2011ஆம்ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதா என்பதை விசாரணை செய்ய இனிமேல் கிரிக்கெட் வீரர்களை அழைக்க மாட்டோம் என விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

கௌரவமான, மூத்த வீரர்களை விசாரணைக்கு அழைத்து அரசு அவமதிக்கிறது என சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜெயவர்த்தன இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு முடிவை மாற்றி, அவர் வரத் தேவையில்லையென அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.