இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் கைது!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றார்கள்.