அதிகாலையில் அதிரடிப்படையால் மட்டக்களப்பில் நால்வர் கைது!

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, வெள்ளாமைச்சேனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு செல்லத் தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களுடன் நால்வரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்கள் கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து இன்று (28) அதிகாலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றிவலைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது முதுரை, தேக்கு, கல்ஓதிய, கட்டாக்காலை வகை அடங்கலாக 34 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்தனர். அத்துடன் சட்டவிரோத மரங்கள் ஏற்றிய எல்ப் ரக வாகனமும், ஒரு மோட்டார் சைக்கிளும், கோடாரி, கத்தி என்பனவும் கைப்பற்றப்பட்டது