கடல் உணவுகளின் விலை அதிகரிப்பு.

தற்பொழுது கடல் உணவுகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது மீன் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கடல் உணவுகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது மீன் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

 யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது குறைவடைந்துள்ளது இதனால்மீன்களின் வரத்து குறைவடைந்துள்ளது .
தற்பொழுது தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆரம்பித்ததன் காரணமாக மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளும்    பாதிக்கப்பட்டுள்ளது கடும் காற்றின் காரணமாக மீனவர்கள்  தொழிலுக்கு செல்லாத நிலையில் காணப்படுகின்றது .சிறு மீன்பிடி தொழிலாளர்களே தற்போது கரை வலை வீசி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கொரோனா தொற்றினை தடுக்கும் முகமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்களிடையே பணப்புழக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மக்கள் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கநாட்டமில்லாது காணப்படுகிறார்கள்
மீன் வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப் படுகின்றார்கள் அத்தோடு சந்தைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சந்தை நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்படுவதால் மக்களின் வருகையும் சந்தைகளில் குறைவடைந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மீன் விற்பனை யானது பெரிதும் பாதிக்கப்படுவதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
யாழ் மாவட்டத்தின் குருநகர் மற்றும் மயிலிட்டி கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு  செல்லாத நிலை  காணப்படுகின்றது. ஒரு கிலோ பெரியமீனின் விலை 500 தொடக்கம் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது .
இறால் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும்கணவாய் 850 ரூபாய்க்கும் யாழ் மாவட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தற்போது மீனுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.