39 வது யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல்.

தமிழர்களின் அறிவுப்பெட்டமாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது 01.06.1981அன்று சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் தமிழர் மீதான இனஅழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டு இன அழிப்பாக எரித்து அழிக்கப்பட்டதன் 39வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் பொதுநூலக முன்றலில் நடைபெற்றது .இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.