இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை-இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி!

இன்று மாலை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவு குறித்த செய்தியினை நம்ப முடியவில்லை” என இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது;

“அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் இந்த செய்தியினை நம்ப முடியவில்லை.”