அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் ரணில்!

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவினால் துயரில் சிக்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.ஆறுமுகம் தொண்டமானின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது மக்களிற்கு விசுவாசமான முறையில் சேவையாற்றிய தலைவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு இலங்கையின் பலசமூகங்களால் உணரப்படும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RW_UNP/status/1265329668913352704