பருத்தித்துறை பிரதேச சபையில் பாதுகாப்பு தரப்புக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு அண்மையில் சபை மண்டபத்தில்  காலை 9:00 மணிக்கு சபை தவிசாளர் ச.அரியகுமார் தலமையில் இடம் பெற்றது. தவிசாளரது தலமை உரையை தொடர்ந்து சபையில்  தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் வே.பிரசாந்தன் கொண்டுவந்த பிரேரணையைத் அடுத்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அக வணக்கம் செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் , நாகர்கோவில் வட்டாரத்தில் இராணுவம் ஐந்து மாதங்களாக இரண்டு காவலரண்களை அமைத்து மக்கள் மீது தொடர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக வட்டார உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் சபையில் தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், கடந்த 17/05/2020 அன்று பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ரஜிதா விஜயழகன் பழுப்பு பொலிசாரல் கடுமையாக அச்சுறுத்தப்பட்டமைக்கும், செம்பியன் பற்று பகுதியில் விவசாய நடவடிக்கைகளிக்கு சென்று உழவியந்திரத்தில் பூசணிக்காய் ஏற்றிக் கொண்டு சென்றபோது கடற்படையால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டதற்க்கும் சபை உறுப்பினர் சிவானந்தம் பிரசாத்  தனது வன்மையான கண்டனத்துக்கு தெரிவித்தார் அதே வேளை ஊரடங்கு உத்தரவு வேளை தம்மால் காவல்  நிலையங்களுக்கு கூட செல்ல முடியாதுள்ளதாகவும், தாம் பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவித்தும் இராணுவம் தன்னை வேண்டுமென்றே 17/05/2020 அன்று மருதங்கேணி சந்தியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் தன்னை திருப்பி அனுப்பியதாகவும் சபை உறுப்பினர் வே பிரசாந்தன் சபையில் தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும் சபையின் நடைமுறை செயற்பாடுகளுக்கான ஆக்கீகாரம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.