திருகோணமலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா !

குவைத்திலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் மரணமடைந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது உறுதியாகியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் இதனை உறுதி செய்துள்ளார்.
குவைத்திலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு திருகோணமலை மங்கிபிரிட்ஜ் இராணுவமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயது பெண்மணியொருவர் உயிரிழந்துள்ளார்.குறிப்பிட்ட பெண் கொரோனாவைரசினாலேயே உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட பெண்மணி இருதயநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதே வேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1164ஆக  அதிகரித்துள்ளது குணமடைந்தவர்களின் 695 ஆக அதிகரித்துள்ளது இறந்தவர்களின் எணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.