சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலவரம் என்ன?

சிங்கப்பூரில் இன்று புதிதாக 344 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,960ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் நால்வர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மற்றவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கியுள்ள அந்நியத் தொழிலாளர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வைரஸ் தொற்றியவர்களில் சுமார் 47 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாகவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக நீடிக்கிறது