அட்டனில் குளவிக்கொட்டுக்குள்ளாகி பெண் ஒருவர் பலி!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

டிக்கோயா ,தரவளை தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகாமலர் என்பவரே உயிரிழந்துள்ளார் .

டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கையில் இன்று காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொத்தியதில் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன .

குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண்களும் இரண்டு ஆண்களுமாக எட்டுபேர் காயமுற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் தேயிலை செடிகளினுள் சிக்குண்டுள்ளவர்களை மீட்க பிரதேசவாசிகளும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

காயமடைந்தவர்களில் தோட்ட சாரதி ஒருவரும் இருப்பதாகவும்,காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டது.