நேற்று சீனாவில் கொரோனா தொற்றுடன் யாருமே அடையாளம் காணப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதத்தில் சீனாவில் கொரொனா தொற்று பற்றிய தகவல்கள் வெளியிட தொடங்கிய பின்னர் முதன்முறையாக தொற்று பூச்சிய நிலையை அடைந்துள்ளது. நேற்று சீனாவில் கொரோனா தொற்றுடன் யாருமே அடையாளம் காணப்படவில்லை.

உலகின் இரண்டாவது ஹொட் ஸ்பொட்டாக பிரேஸில் நீடிக்கிறது.

உலகெங்கிலும் 5,397,342 பேர் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 343,595 பேர் உயிரிழந்துள்ளனர். 2,244,774 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 4,170 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

அமெரிக்கா

நேற்று 1,026 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 98,673ஆக உயர்ந்தது. புதிதாக 21,430 பேர் தொற்றிற்கு உள்ளாகினர். இதுவரை 1,666,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேஸில்

நேற்று 965 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 22,013 ஆக உயர்ந்தது. புதிதாக 16,508 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 347,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா

நேற்று 139 பேர் உயிரிழந்தனர். இதுவரை 3,388 பேர் உயிரிழந்தனர். புதிதாக 9,434 பெர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 335,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா

நேற்று 282 பேர் உயிரிழந்தனர். இதுவரை 36,675 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,959 பேர் உயிரிழந்தனர். இதுவரை 257,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமரின் ஆலோசகர் லொக் டவுன் விதிமுறையை மீறி 400 கிலோமீற்றர் பயணித்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிக்கோ

நேற்று 479 பேர் உயிரிழந்தனர். இதுவரை 6,989 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,960 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். இதுவரை 62,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

நேற்று 50 பேர் உயிரிழந்தனர். 28,678 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக 466 பேர் தொற்றிற்கு உள்ளாகினர். இதுவரை 282,370 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஸ்பெயினின் தீவிர வலதுசாரி கட்சியொன்றினால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து, தலைநகர் மாட்ரிட்டில் அளவிலான வாகனங்கள் திரண்டு போராட்டத்தின் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாண்ட விவகாரத்தில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிவிலக வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மார்ச் 14 அன்று ஐரோப்பாவின் கடினமான லொக் டவுன் விதிகளை ஸ்பெயின் அறிமுகப்படுத்தியது.