புதுக்குடியிருப்பு மருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று (23) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த (20-வயது) பிரதீப்குமார் வளர்சிகன் என்பவர் என தெரியவருகிறது.

குறித்த இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.