பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட 6 நிறுவனங்கள்!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பின் கீழ் காணப்பட்ட ஆறு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.ஜனாதிபதியின் இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி,மிலோடா நிறுவகம்,இராசாயன ஆயுதங்கள் குறித்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபை தேசிய பொலிஸ் பயிற்சி கல்லூரி ஆகிய அமைப்புகளே பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.