அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும்!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் அஜித்பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்துள்ளதால் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கான வரிகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல நடுத்தரவர்க்க குடும்பங்களும் வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பங்களும் தங்கள் வருமான வழிகள் முடக்கப்பட்டுள்ளதால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருட்களிற்கு வரிவிதிக்கவேண்டாம் என முன்னாள் அமைச்சர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.