ஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்!

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் .

மே 24 , ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் , கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23 , சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26 , செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும் .

இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் , கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே , 26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் .

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை . என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.