உழவு இயந்திரம் பயன்படுத்தி கரவலை தொழில் செய்வது தடை.

கரவலைத் தொழில் பெரிதும் பாதிப்பு.
சிறு மீனவர்கள் வரவேற்ப்பு
வடமராட்சி கிழக்கு தாளையடி, கட்டைக்காடு, சுண்டிக்குளம் போன்ற பகுதிகளில் அண்மைய சில வருடங்களாக உழவு இயந்திரம் (பீஞ்ச்) பயன்படுத்தி கரவலை தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் கரவலை தொழிலுக்கான ஆளணி பற்றாக்குறை இன்றியும் இலகுவாகவும் கரவலை மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ள கரவலை சம்மாட்டிமார் அண்மையில் உழவு இயந்திரம் பயன்படுத்தி கரவலை மீன்பிடியில் ஈடுபடுவது நீரியல் மீன் பிடி வளத்துறை அமைச்சினால் தடை செய்யப்பட்ட பின்னர் தாம் கரவலை தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், தம்மை நம்பி கரவலை தொழிலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கரவலை சம்மாட்டிமார்கள்  தெரிவித்தனர்.  இதேவேளை உழவு இயந்திரம் பாவித்து கரவை மீன்பிடி தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டதனால் தாம் பெரிதும் நன்மை அடைவதாகவும் இவ்வாறு தடை செய்யப்பட்டதனால் மீன் பெருக்கம் அதிகரிக்கும் என்றும் மீன் வளரக் கூடிய கடற்பாறைகள் மற்றும் கடல் வாழ் புள்ளினங்கள்
பாதுகாக்கப்படும் என்றும் மீன் பெருக்கம் அதிகரிக்கும் என்றும் சிறிய படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.