காற்றால் 73 பேர் பாதிப்பு.

யாழ்ப்பாண மாவட்டத்தில்  வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த. 24 மணித்தியாலத்திற்குள் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ்தெரிவித்தார்

யாழில் இன்று ஊடகவியலாளர்களுக்கு தற்போது உள்ள காற்றின் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போது நிலவி வருகின்ற அம்பான் புயலில்  தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது குறிப்பாக யாழ் யாழ் மாவட்டத்திலும காற்றின் தாக்கமானது கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது

நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனஅத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த உதவி பணிப்பாளர்
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கரைசேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்
 இந்த காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுனர்
நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின் தாக்கத்தினை விட கடற்கரையில் அண்டிய  பகுதியில் காற்றின் வேகம்கூடுதலாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் மற்றும் மீனவர்கள்  கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்