வீதியில் பயணித்த விவசாயிகள் மீது கடற்படையினர் சரமாரியான தாக்குதல்.

விவசாய நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள்  மீது வயரினால் சரமாரியதான  தாக்குதல் நேற்று நடாத்தப்பட்டிருக்கிறது.

யாழ்  வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த எண்மருக்கே இவ்வாறு தாக்குதல் இடம் பெற்றிருக்கிறது.

நேற்ரு இரவு 7 தொடக்கம் 7.30 மணிவரையிலேயே  குறித்த சம்பவம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்றதாக  தெரிவிக்கப்படுகிறது.

வாகனம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த கடற்படையை ஒத்த  சீருடை தரித்த மற்றும்  சிவில் உடையில் நின்றவர்களாலேயே  இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களது உடல்களில் பலத்த கண்டல்கல் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக மருத்துவ மனைக்கு செல்லாமலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவும் மறுத்து வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உழவியந்திரம், மோட்டார்சைக்கிள், சைக்கிள் போன் வாககனங்களில் தனித்தனியாக பயணித்தவர்கள் என்றும் எதற்க்காக தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் தமக்கு காரணம் தெரியவில்லை என்றும் அச்சம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்

இதேவேளை ஊரடங்குச் சட்டம் இரவு 8மணிக்கே நடைமுறைப்படுத்தப்படுகின்ற சூழலில் 7.30 மணிக்கே இத் தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது