யாழ் கே.கே.எஸ் வீதியில் இடம்பெற்ற அசம்பாவிதம்; ஆபத்தான நிலையில் இளைஞன்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

10.20 மணியளவில் கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் மின்கம்பம் நாட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகன்றது.

தனியார் நிறுவனம் ஒன்று மின்கம்பங்கள் நடும் வேலையை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மின்கம்பங்கள் நடும் போது மின்சாரசபைக்கு அறிவித்தல் வழங்கி மின்சாரத்தை துண்டிக்காது குறித்த வேலையில் ஈடுபட்டிருந்த போதே இளைஞன் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.