முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுழிபுரம் திருவடிநிலை சைவ மயானத்தில் அஞ்சலி.

ஸ்ரீ அகத்தியர் தமிழ் சன்மார்க்க சங்கத்தின் ஏற்;பாட்டில் முள்ளிவாய்க்கால் மற்றும் ஈழத்தின் ஏனைய பிரதேசத்தில் கொடிய யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு  அவர்களின் ஆத்ம சாந்தி அடைவதற்கான பிரார்த்தனைகள் கடந்த 20.05.2020 செவ்வாய்கிழமை முற்பகல் 1 மணியளவில் சுழிபுரம் திருவடிநிலை சைவ மயானத்தில் இச்சங்கத்தின் பணிப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களின் தலைமையில் சைவசமய முறைப்படி நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வணக்கத்துக்குரிய நல்லூர் சுவாமி சிடகாஷானந்த அவர்களும், சைவ சிவாச்சரியர்களும் மற்றும் முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம், ஊடகவியளாளர்கள், சமூக ஆர்வளர்கள், பொது மக்கள் முன்னிலையில் இந்த காலத்தின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளி பேணப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.