யாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை நிலையமொன்றில் பணிபுரியும் கள்ளியங்காட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

இது தற்கொலையா, கொலையா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.