உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இனி பரீட்ச்சைக்கு கணிப்பான்கள் கொண்டுசெல்லலாம்!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைகளின்போது பரீட்சார்த்திகள் கணிப்பான் (Calculators) பயன்படுத்துவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம்  அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணக்கீடு, பொறியியலுக்கான தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுக்கான பரீட்சார்த்திகளுக்கு கணிப்பானை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

எனினும் தொலைபேசி கணிப்பான், மின்னணு கணிப்பான் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கணிப்பான்களை பயன்படுத்த ஆர்வமில்லாத பரீட்சார்த்திகள் கணிப்பான்கள் இல்லாமலும் பரீட்சை எழுதலாம்